Clicky

மலர்வு 13 SEP 2003
உதிர்வு 13 MAY 2020
செல்வன் செல்வராசா நிரூபன்
வயது 16
செல்வன் செல்வராசா நிரூபன் 2003 - 2020 மிலான், Italy Italy

கண்ணீர் அஞ்சலி

Yana 15 MAY 2020 Australia

காற்றோடு வந்த செய்தி காற்றோடு போய் விடாதா? உள்ளமது உண்மையதை ஏற்க மறுக்கின்றதே? ஏன் இந்த துயரம் நம் வாழ்விலே, ஒரு தடவையேனும் உன் குரல் கேட்டு உன் வதனமதை பார்த்திருந்தால் என் அலையும் ஒய்ந்திருக்குமோ என்னவோ? ஒரு வாரமதில் ஒரு தடவையேனும் உன்னை மனம் நினைக்காமல் இருந்ததில்லை நாம் கடல் கடந்து இருந்த போதிலும், என்றாவது ஒரு நாள் விடியல் காணுவோம் என்று எண்ணி இருந்தோம். நம் கனவெல்லாம் கனவாகவே கலைந்ததேனோ? கறுப்பு நாட்கள் ஆனதேனோ? ஆண்டுகள் கடந்தாலும் நம் மனதில் நீ என்றும் கடைக்குட்டியே.. உள்ளமது உடைவதனை யாரறிவார் பாரினிலே? மறு பிறவியிலும் நீ என் தம்பியாகவே பிறக்க வேண்டும் ஆனால் என் அருகிலே நீ இருக்க வேண்டும். No one can fill your place in our life Nirupan, There is no words to explain your loss in our family.