Clicky

45ம் நாள் நினைவஞ்சலி
மலர்வு 13 SEP 2003
உதிர்வு 13 MAY 2020
செல்வன் செல்வராசா நிரூபன்
வயது 16
செல்வன் செல்வராசா நிரூபன் 2003 - 2020 மிலான், Italy Italy
45ம் நாள் நினைவஞ்சலி

இத்தாலி Milan ஐப் பிறப்பிடமாகவும், Trivero Pon Zona  Biella ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா நிரூபன் அவர்களின் 45ம் நாள் நினைவலைகள்.

எம் இதயக்கோயிலில் குடி கொண்ட
எமது அருமைச் செல்வன் நிரூபனின்
45ம் நாள் நினைவலைகள்

நித்திரைக்கு செல்கின்றோம்......
நிசப்தத்தின் நடுவே.........
கண்களை அறியாமல் கண்ணீர்
சொரிகின்றது ஏன்?......ஏன்?....நிரூபனே!
நம்ப மறுக்கின்றது - நீ எமை
விட்டகன்று சென்றதனை....
கண் இமைக்க மறுக்கின்றது
கண்ணே இது கனவாகாதோ.....
என்று மனம் ஓலமிடுகின்றதையா
மெளனப் பிரார்த்தனையில்

வாரங்கள் ஆறு என்ன - அறுபதுதான்
சென்றாலும் இன்றும் நீ - எம்முடன்
இருப்பது போல் மனம் நினைக்கின்றது
எம் இதயத்தில் குடியிருக்கும் - எம்
குட்டி நிரூபனே ஒருமுறை
வந்து எம் மனதை வருடிவிடாயோடா?
அழுது துடிக்கின்றோமையா
ஆறுதல் சொல்ல யாரும் இல்லாதபோது
உன் ஆன்மாவுடன் பேசுகின்றோம் நிரூபனே!

எம் வீட்டின் தீபமாய் - நீ
ஒளிர்வாயென்று நாம் நினைக்க
சொல்லாமல் கொள்ளாமல் 
எங்ககன்றாய் இதயப்பெட்டகமே......?
பதினாறு வருடங்கள் பணிவிடைகள்
பல செய்தோமடா நிரூபனே - உனக்கு
சொர்க்கமாய் எம் வாழ்வு மலருமென்று
சோர்ந்து போனோமடா செய்வதறியாமல் நாமிங்கு

எம் நெஞ்சோடு நீ விட்டுச் சென்ற
நினைவலைகளை மீட்டுகின்றோம் - இப்போ
நெருஞ்சி முள் தைத்தது போல்
நெஞ்சு வலிக்குதடா நிரூபனே......
விஞ்சியழும் எமைப் பார்க்க
திரும்பி நீ வாராயோடா
வீழ்ந்தழும் எமைத் தேற்ற
எழுந்து நீ வாராயோடா - எம்
உயிர் தெய்வமே நிரூபா.....
ஓம் சாந்தி!  சாந்தி! சாந்தி!

இங்ஙனம், அம்மா, அப்பா & குடும்பத்தினர்
Tribute 48 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.