Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 13 SEP 2003
உதிர்வு 13 MAY 2020
செல்வன் செல்வராசா நிரூபன்
வயது 16
செல்வன் செல்வராசா நிரூபன் 2003 - 2020 மிலான், Italy Italy
Tribute 48 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

இத்தாலி Milan ஐப் பிறப்பிடமாகவும், Trivero Pon Zona  Biella ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா நிரூபன் அவர்கள் 13-05-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், யாழ். மந்துவில் மேற்கு கொடிகாமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா, பாக்கியம் தம்பதிகள், யாழ்.  கரவெட்டி கிழக்கு தெடுத்தனையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

செல்வராசா(மூர்த்தி) சிவலோஜினி தம்பதிகளின் ஏக புத்திரரும்,

தவயோகராசா- சறோசாதேவி, சிவயோகராசா- இன்பகலா, அருந்தவராசா(கஜி கூல்பார்)- அருந்தவசோதி, சிவராசா(சிறி- வெற்றிலைக்கடை, கொடிகாமம்)- சிவராணி, தருமராசா(C.T.B), தமயந்தி,  ராசா(ஜேர்மனி), சிவாஜினி- ஜெயசிங்கம்(கனடா), சிவநந்தினி- காலஞ்சென்ற புவனேஸ்வரன்(லண்டன்), சிவவதனி- புஸ்பாகரன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

அன்னலட்சுமி- நாகரத்தினம், சிவகுமார்(சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர், கிளிநொச்சி)- சிவமலர், சிவதாசன்- விஜயா(லண்டன்), சிவகரன்- தர்சனா(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

தவமலர்(லண்டன்)- தவரூபி, தவப்பிரியா, சோபனா(லண்டன்), விதுர்ஷா(மாணவி- இயல் மருத்துவம் பேராதனை பல்கலைக்கழகம்), லக்‌ஷிகா(மாணவி- பொறியியல் பீடம் மொறட்டுவ), கஜீபா,  லக்‌ஷயா(லண்டன்), அனாமிகா(கனடா) ஆகியோரின் ஆசை மச்சானும்,

நிதர்சன், நிசாயா, யோநிதா(அவுஸ்திரேலியா), ஜனக்சன்,  சிந்துயன்(கனடா), விதுணன், கவுசிகன், வினுயன், அருள்நிதி(பிரான்ஸ்), நிலராஜ், ஜீவிகா(ஜேர்மனி),  ராகவி, கஜீனா,  சனுஷன்(கனடா),  தனுஷன், கானுஷன்,  வேணுஷன், தக்‌ஷா,  லக்‌ஷிகன்,  லக்‌ஷன்(பொறியியல் மாணவர், கனடா), சரண்ஜன்(லண்டன்), சிநேகன்(லண்டன்), சங்கீதன்(லண்டன்), பிரிஸ்டிகா, வானுஜன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2020 சனிக்கிழமை அன்று பி.ப 01:30 மணிமுதல் பி.ப 03:00 மணியளவில் Ponzone Billa Church யில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சிப்பிக்குள் முத்தாய் அன்னையின் கருவறையில்
இப்புவியில் உதித்த செங்கதிர் சுடரே..
தத்தி நடைபயில.. தளிர் கால் நோகுமென்று
பக்குவமாய் பார்த்திருக்க செவி வழி செய்தியாக
பேரிடியாய் வந்த செய்தி பெரியதோர்
நோய் என்று வைத்தியர் பகன்றாரென்று…
ஊனும் உறக்கமும் இன்றி பெற்றோரும்
ஊற்றோரும் ஓடி ஓடி கை தொழுதோம்

காலைப்பொழுதினிலே காற்றோடு வந்த..
செய்தி இடி போல் விழுந்திட
கண் இமைக்கும் நேரமதில் காலன் உனை
கவர்ந்த வேளை காவலனாய் நாமில்லை
கதி கலங்கி நிற்கின்றோம்…  நாதியற்றவராய்

அன்னை தந்தைக்கு ஆசைக்கோர் மகனாய்
அவதரித்த எம் அன்பு செல்வமே..
ஆதரவின்றி கதி கலங்க வைத்துவிட்டு
அவனியை விட்டு அகன்றாயோடா..

அழுது துடிக்கின்றனர் அன்பான அப்பா அம்மா ஆதரவின்றி
அவனியில் நாம் இனி வாழ்தல் முறையோ என்று..
ஆண்டவன் சந்நிதியில் அழுது புரண்டும்
ஆசை மகனே… உன்னை காலன் விடவில்லை

ஐயகோ! இது என்ன விதியடா
வையகத்தில் வாழ ஆசைப்பட்டு
என்னிலடங்கா துன்பத்தை நீ
அனுபவித்தாய் செல்லமே…
குணமடைந்து நீ கொழுந்து விடுவாய்
என்று கோடி கற்பனை நாம் செய்தோமையா.

எம் குலம் விழுது விட உதித்திட்ட முத்துக்களுக்குள்
கடைசி முத்தடா நீ கண்ணே..
தந்த கடன் வாங்க என்று தரணியில் வந்து விட்டு
முதல் முதலாய் முன்றியடித்து சென்றுவிட்டாய்
எம் செல்வ மகனே.. நிரூபன்… நீ… 

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார்  என்றும் மீண்டு வருவதில்லை இருந்தும்
அழுது துடிக்கின்றோமடா ஆண்டவன்
நின் ஆத்மா சாந்திக்காய் ….. காலடியில்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!   

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos