
இத்தாலி Milan ஐப் பிறப்பிடமாகவும், Trivero Pon Zona Biella ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா நிரூபன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
கருவறை சுமந்த அன்னையின் ஏக்கம்
கருவறையில் சுமந்த நாள் முதலாய்
குறையேது மின்றி கண்போல் காத்தோமே
நலமொன்று நினைக்க விதிஒன்று எண்ணியதே
தீராநோயால் நீதுஎண்ட போது நாமெல்லாம்
மீளாத துயரம் கொண்டோம் மகனே!
மீட்டு எடுப்போம் என்றே போராடித் தோற்றோமே
நீளும் என்கரத்தினை பற்றிப் படித்து
என்மடிமீது தவழ மாட்டியா?
என்னுயிரே என் செல்வமே!
விதியின் கண்ணாமூஞ்சி விளையாட்டில்
அப்பாவையும் துணைக்கு அழைத்தனையே!
வருடம் ஐந்து ஓடி மறைந்தாலும் மகனே!
தத்திக் தளிர்நடை நடந்து
நீர்செய்த குறும்பெல்லாம் எண்ணுதொறும்
கனவாய் தொலையவில்லை என்மனதில்
நிழற்படமாய் பார்க்கும் இடமெங்கும்
பரந்து காண்பது போல்
நிக்கமற நிறைந்து தெரிகின்றாயே
என்மகனே! ஆருயிர்ச் செல்வமே
சுமந்த கருவறை தணலாய் கொதிக்கையிலே
எமைத் துற்ந்து தந்தையையும் துணைக்கழைத்து
தன்னந்தனியனாய் எமைத் தவிக்கவிட்டு
ஏன் ஐயா சென்றீர்கள் நானென் சொல்வேன்
மகனே நீளும் என் கரத்தினை
ஓடிவந்து பற்றிப்பிடித்து என் மடிமீது
என் மடிமீது தவழ்ந்திட்டால் அதுவே
போதுமப்பா செல்வ மகனே!
விதியின் கண்ணாமூஞ்சி விளையாட்டில்
ஐந்து வருடங்கள் உருண்டோடிச் சென்றதப்பா
ஆண்டுகள் ஐந்து ஆனாலும் மகனே
தத்தித் தளிர்நடை நடந்து
நீர் செய்த குறும்பெல்லாம்
கனவாகிப் போனாலும் எம்மனதில்
நிழற்படமாய் வலம் வருகிறது மகனே!
Very very hard to think a young cute boy without a future died four years ago sad. Accept my deepest sympathies.