1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 SEP 2003
இறப்பு 13 MAY 2020
செல்வன் செல்வராசா நிரூபன்
வயது 16
செல்வன் செல்வராசா நிரூபன் 2003 - 2020 மிலான், Italy Italy
Tribute 44 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

இத்தாலி Milan ஐப் பிறப்பிடமாகவும், Trivero Pon Zona  Biella ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா நிரூபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வானத்து மின்விளக்கு ஒன்று
மண் மீது வந்ததென்று
அன்பு மகனே உனை நாம்
சிரம் மேலமர்த்தி சீராட்டி வளர்தோமடா... 

 கானகத்து கவரிமான் ஒன்று
கட்டவிழ்த்து எம் மடிமீது வந்ததென்று
மனம்  மகிந்து வாழ்ந்தோமடா...

நாளொரு மேனியாக நாம்
வளர்த்த மானொன்று கண்முன்னே
கட்டிளம் காளையாக கனவாய் வளர்ந்து நின்றதடா.. 

 படைத்த பிரமனுக்கே மனம்
பொறுக்கவில்லையடா எங்கள்
மரிக்கொழுந்தின் வளர்ச்சிதனை
பொல்லாத  நோயொன்று உன்
மேனியில் வந்த அன்றே
காலன் பாதம் பற்றி கதறி அழுதோமையா...

காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்
என்ற உன் அனுங்கல் ஓசை
இன்றும் எம் காதினிலே..
கனலாய் கொதிக்குதையா...
கல்லுவைத்த கோவில் எல்லாம்
கதறி துடித்து வேண்டினோமடா எம்
மான் குட்டியை மீட்டு எடுப்பதற்கு

எம் மனம்.. இன்றும்
வெம்பி வெடிக்குதையா உன்
மீளா துயிலை எண்ணி
ஆண்டு ஒன்று என்ன..,
ஆயிரம் ஆண்டு சென்றாலும்
கண்ணே! நீ எமக்கு
கண்ணின் மணிதானடா..

ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்.. கண்ணே
உன் அன்பு மொழிக்கும்
ஆசை பார்வைகளுக்கும்
ஈடாகுமாடா...?

உன் கல்லறை மீது நாம்
வந்து வார்க்கும் கண்ணீரில்
கல்லே கரையுமடா..
எம் இறுதி மூச்சுள்ளவரை உன்
நினைவலைகளால் நித்தமும்
துடி துடிக்கும் உன் அன்பு
அப்பா, அம்மா  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos