Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 13 SEP 2003
உதிர்வு 13 MAY 2020
செல்வன் செல்வராசா நிரூபன்
வயது 16
செல்வன் செல்வராசா நிரூபன் 2003 - 2020 மிலான், Italy Italy
Tribute 48 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

இத்தாலி Milan ஐப் பிறப்பிடமாகவும், Trivero Pon Zona Biella ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா நிரூபன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நிசங்களை விட நினைவுகளை நேசிக்கின்றோம்
நிரூபா செல்லமே
நான்காண்டு சென்றாலும் எங்கள் நெஞ்சம்
கல்லாகக் கனக்கிறதே நிருபா
தந்தை செல்வனே மகன் பாதை சென்றதேனோ
மனைவி உறவுகளை தாம் மறந்து
பாருலகில் வாழ்ந்தது போதுமென்று
பரமனிடம் சென்றீர்களே
நீங்கள் மண் விட்டு விண்ணோக்கிச் சென்றாலும்
கண்விட்டு மறையாமல் கனகாலம் இருந்திடுவீர்
அழுது தீர்த்தாலும் சில ஆழமான நினைவுகள்
நெஞ்சத்தில் நிலைத்து நிற்கும் பந்த பாச நினைவுகள்
இரக்கமில்லாத அரக்கன் ஒருவனால்
மறக்க முடியாத பிஞ்சு மரணம்
நிரூபா உன்னையும் உன் அப்பாவையும்
மறந்து விடுவோம் என்று கனவில் கூட நினைத்துவிடாதே
மறப்பதற்கு நீங்கள் ஒன்றும் கனவு கிடையாது
உன் இறுதி நொடியில் கூட உன் இழப்பு
பொய்யாகாதோ என விம்மி விம்மி அழுதோம்
எங்கள் உயிர்ப்பாச உறவே
அன்றும் இன்றும் என்றென்றும் வாடுவோம்

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices