யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி சிவஸ்கந்தா அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏனோ தெரியவில்லை மனசு வலிக்கிறது
வானோ சொரிகின்றது கண்ணீர் மழையால்
தானாய் வரும் துன்பங்களை
தூணாய் நின்று எதிர்த்திட்ட எங்கள் தாயை
காணாத கடவுள் கவர்ந்து சென்றுவிட்டான்
மூணாகி உலகம் உடைந்துதான் போனாலும்
தேனாக நீங்கள் தந்த அன்பு
வீணாகிப் போயிடாது வீச்சாய் இருந்துவிடும்
பேனா கொண்டு நீங்கள் எழுதிவிட்டால்
பேய்கள் கூட ஓடிவிடும் பேதியிலே
தோணி பிடித்து நாம் தூரதேசம் போனாலும்
ஆணியாய் எங்கள் மனதில் அம்மாதான்
ஏணியாய் இருந்து எங்களை ஏற்றிவிட்டு
பணிதான் முடியுமுன்னர் பிணிவந்து விடவில்லை
பேணித்தான் வளர்த்தீர் பேதலிக்க விட்டு விட்டு
போய்விட்டீர் அந்த பொல்லாத கடவுளிடம்
பாழாகிப்போன நோய் வந்து தூளாக்கிப் போட்டது உடலை
மீளாத துயரம் எங்களை தாளாமல் வாட்டுது
வாழாமல் போனீரா இல்லை வாழ்ந்து விட்டுத்தானே போனீர்
ஆளாக எங்களை ஆக்கிவிட்டு
ஆண்டவனிடம் தான் போனீரோ
தேளாய் கொட்டிக்கிடக்கும் மனதை தேற்றிட யாருமில்லை
கேளாமல் நீர் தந்த அன்பு கேட்டாலும் கிடைத்திடுமா
வீழாமல் இருக்கின்றோம் உங்கள் வரவைத்தேடி
RIP Saro...