யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி சிவஸ்கந்தா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து மாதம் பெற்றதாய் எமைவிட்டுச்சென்று
பத்தாண்டுகள் பட்டென மறைந்தனவே
பந்தங்கள் பல இருந்தும் பல்லாயிரம் இருந்தென்ன
பாசத்தாய் இல்லாத பாவிகள் நாங்கள்
பல கஷ்டம், பல துன்பங்கள் வந்த போதும்
பக்கத்தில் நீரிருந்தால் பனியாய் விலகிவிடும்
பல பருந்துகள் வட்டமிட்டபோதும் காத்த தாய்க்கோழி
பாசங்கள் கொண்ட தாயை வேசங்கள் போட்டு
பறித்து விட்டான் பாவிக் கடவுள்
பட்டொளி வீசிய அம்மாவைப் பறித்து
பரிதவிக்க விட்டுவிட்டான் இருட்டினிலே
புரிந்து கொள்ளாத மனிதர்கள் கூட
பரிந்து பேசும் அம்மாவிடம் தோற்றுப் போவர்
வரிந்துகட்டிச் சண்டையிட்டோர் அறியாமை
சரிந்து விழ சிரித்து வழியனுப்பும் அம்மா
நரிகள் சில ஊளையிட்ட போதும்
சீறிய சிறுத்தையாய் நீர் இருந்தீர்
புரளிக் கதைபேசும் சில புல்லுருவிகளுக்கு
சிரசு கவிழ சிறு புன்னகை போதும்
எரிந்து விழாத எரிமலை அம்மா
உண்ணாமல் உறங்காமல் உதிரந்தந்த அம்மாவை
கண்ணாகக் காத்த கடவுளை
எண்ணாமல் நாங்கள் எந்நாளும் இருந்ததில்லை
முன்னாலும் நீரே பின்னாலும் நீரே
எந்நாளும் நீரே
தன்னாலே நாம் போக தவம் பல செய்த தாயே
விண்ணிலே வாழ அப்பாவும் வந்துவிட்டார் உங்களிடம்
கண்ணிலே நீர்வடிய வழியனுப்பி வைத்துவிட்டோம்
மண்ணிலே நாம் வாழ புண்ணியங்கள் பல செய்தீர்
எண்ணியது நடந்திடும் கண்ணியமான தாயே
You were so caring and intelligent. Left the world early. We miss you a lot.