யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி சிவஸ்கந்தா அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
பன்னிரெண்டு ஆண்டுகள் பறந்தனவே
அந்தமில்லா அன்புதந்த எந்தன்தாயே
உந்தன் அடிபணிந்தோம் வந்தெமைப் பாரீர்
சொந்தமாய் இருந்த எங்கள் பந்தமே
கந்தனை வணங்கும் நாளில்
விந்தைகள் செய்யும் வேந்தனும் விடவில்லை
வஞ்சனை செய்து பறித்துமே சென்றுவிட்டான்
நிந்தனை செய்யும் உலகில் இங்கே
எந்தையர் எல்லாம் பந்தமாய் இருங்கள் என்று
முந்தநாள் கனவில்வந்து முந்நூறு தரம் சொல்லி
வந்தநாள் அத்தனையும் வேதனையில் கிடக்கிறது
சிந்தனை செய்கையிலே சிரசெல்லாம் வலிக்கிறது
உந்தனைக் காண இனியொரு பிறவி வாராதோ?
வந்தெம்மை ஆட்கொள்ளும் இப்பிறவிதனிலே
மஞ்சப்பேழையிலே கொண்டு வெந்தணலில் தள்ள
கெஞ்சிநாம் கேட்டும் கஞ்சக்கடவுள்
கொஞ்சமும் இரங்கவில்லை கொண்டுமே சென்றுவிட்டான்
அஞ்சா நெஞ்சம் கொண்ட எங்கள் அம்மாவை
துஞ்சா விழிகொண்டு எமைப்பார்த்த மங்கா விளக்கை
மிஞ்ச யாருண்டு தஞ்சமென்றிருந்தோம் தவிக்கின்றோம்
பஞ்சமா வரும் நீரிருந்தால் ஊஞ்சல் ஆடுகையிலே
இஞ்சவா என்று சொல்லி ஊட்டிவிடும்
கஞ்சிக்கு வருமா ஈடுஇணை இவ்வுலகில்
பஞ்சு உள்ளம் கொண்ட பரிமளம் பெற்றமகளை
வஞ்சமாய் வந்து வஞ்சகக்கடவுள் பிரிந்துவிட்டான்
மஞ்சத்தில் கிடந்தாலும் நெஞ்சமோ பொறுக்குதில்லை
காய்ஞ்சு போனது கண்ணீர் மட்டுமல்ல
சாய்ஞ்சு கொள்ளும் உங்கள் தோள்களும் தான்
ஓய்ஞ்சு போகாமல் எமக்காய் உழைத்த
தேய்ஞ்சு போகாத சந்திரனே தேடுகிறோம் வந்துவிடும்
உங்கள் பிரிவால் வாடும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்
You were so caring and intelligent. Left the world early. We miss you a lot.