யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி சிவஸ்கந்தா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எட்டியே எம்மை நடக்கவிட்டு எட்டாமலே நீர் சென்று
எட்டாண்டு மாகிப் போச்சு
ஏட்டிலே எழுதவைத்து அழகு பார்த்த அம்மாவைப்
பாட்டிலே எழுதவைத்து பரலோகம் சென்றுவிட்டீர்
தட்டிலே சோறு போட்டு ஊட்டி விட்ட அம்மாவை
பெட்டியிலே போட்டு மூட்டிவிட்டோம் தீயை
கெட்டு நாம் போகாமல் தட்டி வளர்த்த அம்மா
விட்டு நீர் பட்டெனவே மறைந்து விட்டீர்
கட்டி வளர்த்த சொந்தம் கட்டறுந்து போகாமல்
நட்டு நடுமரமாய் நின்ற அம்மா
நட்டாற்றில் எமை விட்டு நாதனடி சேர்ந்துவிட்டீர்
கூட்டிலே நாமெல்லாம் கூடி வாழ்ந்து வந்தோம்
வேட்டுவன் வடிவில் வந்து யமனும் கூட்டியே சென்றுவிட்டான்
காட்டிக்கொடுத்து எம்மை கயவர்கள் பிடித்த போதும்
மாட்டி நாம் நிற்காமல் மீட்ட எங்கள் அம்மா
சொட்டும் குறையாமல் நீர் சொரிந்துவிட்ட அன்பினை
கொட்டிக்கொடுத்தாலும் இவ்வுலகில் பெற்றிடமுடியுமா?
ஏட்டிக்குப் போட்டியாய் படித்த பேர்த்தியும்
பட்டப்படிப்பு செல்ல தகுதியும் பெற்றுவிட்டாள்
மட்டில்லா மகிழ்ச்சிகாண மாதாவே நீரும் இங்கில்லை
பாட்டியே என்று சொல்ல பூட்டியும் வந்துவிட்டாள்
கேட்டியே கதையென்று நீர் இருந்தால் சொல்லியிருப்பாள்
சுட்டிரீவி பார்த்தபிள்ளை குட்டிக்கவிதை சொல்லி
கெட்டிக் காரியாகிவிட்டாள்
வெட்டிப் பேச்சு பேசா மட்டில்லா மாணிக்கத்தை
தொட்டுப்பார்க்க முடியலே தொலைந்து போயிருச்சு
ஓட்டி இல்லா படகுபோல தத்தளிக்கின்றோம்
வாட்டிய துயர் நீங்க பூட்டிய கதவு திறந்து
மீட்டிட ஓடி வாரும்..
என்றும் உங்கள் நினைவுடன் கணவர், பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
You were so caring and intelligent. Left the world early. We miss you a lot.