திதி : துதியை
யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி சிவஸ்கந்தா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறுதலாய் இருந்த அப்பாவும் வந்துவிட்டார் உங்களிடம்
ஆற்றுகைப் படுத்த யாருமில்லா உலகில் வாழுகிறோம்
பெற்றவர்கள் நீங்களில்லாமல் பெருந்துயரில் நாம்
உற்றவர், சுற்றவர் இருந்தென்ன உம் போலாகுமா?
முற்றும் இழந்துவிட்டோம் உம்மை
நற்றோராய் வளர்த்தீர் நடுவிலே சென்றுவிட்டீர்
நாற்திசையும் தேடுகிறோம் நாலு வார்த்தை பேசிட
காற்சட்டை போட்டு கட்டழகாய் வளர்த்த நாட்கள்
கோட், சூட் போட்டாலும் வந்திடுமா அம்மா
பாற்சோறு ஊட்டி பக்குவமாய் வளர்த்தீர்
பாலூற்றி உம்மை பற்றியெரிய விட்ட பாவிகள் நாம்
மற்றோரை எல்லாம் வேற்றாரைப் பார்க்காமல்
ஒற்றுமையாய் ஒன்றிணைத்தீர் ஆனாலும்
சீற்றம் நீர் கொண்டால் சிங்கம் கூட ஓடிவிடும்
போற்றி போற்றி என்று சொன்ன பொல்லாத கடவுளும்
ஈற்றிலே விட்டுவிட்டான் பற்று வைத்த அம்மாவை.....
கொட்டும் மழை பாராமல் எமக்காய் உழைத்த அம்மாவை
பெட்டியிலே போட்டு போகவிட்டோம்
சற்றும் எதிர்பாரா நேரத்தில் இருவரும் போய்விட்டீர்
நற்றவம் செய்துவிட்டோம் நானிலத்தில் உமைப்பெற
ஏற்றம் நாம் காண ஏணியாய் நீர் இருந்தீர்
ஏற்றியே தீபம் உமை வணங்க வைத்திட்டீர்
தேற்றிவிட எமக்கு இப்போ யாரிருக்கா அம்மா
சொற்கள் வரவில்லை உமைச் சொல்லிட சோர்ந்தே போகிறோம்
காற்றிலே நாம் அழைக்கும் குரல் உம்காது வந்து சேராதோ
கற்றறிந்த அம்மா கண்கலங்கி வாடுகின்றோம்
கண்ணீர் வந்து துடைத்துவிடும்.
RIP Saro...