யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி சிவஸ்கந்தா அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-11-2024
பதின்மூன்றாவது ஆண்டு நினைவுகள்
பென்னம்பெரியமலை சரிந்து
பதின்மூன்று ஆண்டுகள்
கன்னங்களில் நீர் வழிய
கன்னங்கரிய இருள்சூழ்ந்து
விண்ணுலாவும் நிலாவை
இன்னும்தான் தேடுகிறோம் காணவில்லை
தன்னந்தனியே தனித்து நாமிருந்தாலும்
முன்னம் நீர் செய்த புண்ணியம்
எந்நாளும் எம்மைக் காத்திடும்
என்னதான் நடந்தாலும் சன்னம் தான்
துளைத்தாலும் அன்னையே நீரிருந்தால்
சின்னதாய் போய்விடும் சிலபிரச்சினைகள்
சொன்னவார்த்தைகள் சொர்க்கம் தான் போனாலும்
பொன்னாய் எம் நெஞ்சில் பொறித்துக்கிடக்கிறது
அன்னமூட்டி எம்மை அரவணைத்திட்ட
அன்பான தாயே ஆதரவுதேடி அழுகின்றோம்
துன்பம் சூழ்கையிலே துவண்டிடாமல்
கண்ணாய் காத்திட்ட கலங்கரைவிளக்கே
கண்மூட முடியவில்லை கலங்குகிறோம் தாயே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணும் போதும் முடியவில்லை
முடிவில்லா பயணமிது
வண்ணமயமாய் வாழ்ந்திட்ட காலங்கள்
எண்ணிநாமிருந்தாலும் இனியும் வந்திடுமோ
புன்னகை தவழும் உங்கள் முகம்
எந்நாளும் இனி காணமுடியாதே
முன்னேறி நாம் வாழ்ந்திட
நன்னெறி காட்டி நடந்திட்ட நல்லாளே
உன்வழி நாம் தொடர்வோமே...
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்...!
RIP Saro...