யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி சிவஸ்கந்தா அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
மடியினிலே தூங்கிவிட மண்ணிலே நீருமில்லை
தேடியே பார்க்கிறோம் தேற்ற யாருமில்லை
மாடிவீடு தந்திடுமா மாசற்ற அன்புதனை
கூடியே வாழ்ந்தோம் கூட்டைக் கலைத்தது யார்?
ஈடிணையில்லா ஈகைப்பேரொளியைப்
ஓடியேவந்து எடுத்தே சென்றுவிட்டான் எமன்
வாடிய எங்கள் முகம் பார்த்தும் இரங்கவில்லை அவன்
இடியே வந்தாலும் உடையாத அம்மாவை
பாடையிலே போக வைத்துவிட்டான் பாவிக்கடவுள்
முடியாதா இவ்வாழ்வென்ற முடிவற்ற கேள்விகளுடன்
கடிகாரமும் ஓடவில்லை கால்மணித்துளி கூட ஆனாலும்
ஓடியே போனது பதினொரு ஆண்டுகள்
தட்டிக்கொடுத்துவிட தந்தையுமில்லை
கட்டியிணைத்துவிட தாயுமில்லாமல் கதறுகிறோம்
கொட்டிக் கொடுத்துவிட கோடி இருந்தென்ன
ஊட்டிவளர்த்துவிட்ட தாய்க்கு ஈடாகுமா?
காட்டியே கொடுத்து சிலர் மாட்டியே விட்டபோதும்
பூட்டிய கதவினை உடைத்து கூட்டியே வந்தவர் அம்மா
வாட்டிய துயர் கண்டும் வரவில்லை ஏனோ?
ஏட்டினிலே எழுதி பூட்டியும் வந்துவிட்டாள்
பாட்டி எங்கே என்று வீட்டிலே நீருமில்லை
தொட்டிடா தொலைவு நீரும் சென்றதும் ஏனோ?
உங்கள் பிரிவால் வாடும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்
You were so caring and intelligent. Left the world early. We miss you a lot.