யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி சிவஸ்கந்தா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏங்க எமைவிட்டு தூங்கிவிட்டீர்
தாங்க முடியவில்லை துயரம் வாங்கமுடியுமா தாயை
பொங்கியழவிட்டு தங்கிவிட்டீர் விண்ணிலே
தங்க இடமொன்று அமையும் அங்க வந்து குடியேற
நீங்கா நினைவுகளுடன் நீங்கிவிட்டீர் எமைவிட்டு
ஓங்கி ஒலிக்கும் குரல் ஓய்ந்துதான் போனதுவோ
இங்க நாங்க வந்து இங்கிதமாய் இருந்தாலும்
உங்க குரல் கேட்காமல் உயர்ந்து தான் போவோமோ!
சங்கத் தமிழ் சொல்லி சங்கீதப் பாடல்பாடி
வேங்கையாய் எமை வளர்த்த பங்குனித்திங்கள் அம்மா
அங்கங்கள் தேய பங்கங்கள் வந்திடாமல்
தங்கமாய் எமை வளர்த்த தங்கத் தாம்பாளம் அம்மா!
தூங்காமல் நீரிருந்து தூங்க எமைவிட்டு
ஏங்காமல் நாங்கள் பாங்காய் இருந்திட
தாங்கிவிட்டீர் உம் தோளினிலே
வங்கக் கடல் கூட ஆர்ப்பரிக்கும்!
எங்கள் அம்மாவின் மறைவினிலே
மங்களமாய் வாழ்ந்து மறைந்து விட்டீர்!
அங்காள அம்மனின் திருவடிக்கு
எண்ணிய மனதுடன் நாம் வாழ
திண்ணிய கருமமாற்றி விண்ணிலே போய்விட்டீர்!
பண்புடன் வாழ பல கதைகள் சொல்லி
அன்புடன் எமை தென்புடன் வளர்த்த அம்மா
வண்ணமயமான வாழ்வு தந்து
கண்ணிலே நீர் கசியச் சென்றுவிட்டீர்
You were so caring and intelligent. Left the world early. We miss you a lot.