லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சஜீவ் ரவிகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இத்துயர நிகழ்வின் தாக்கத்தால், கலந்து கொண்ட அனைவரையும் எம்மால் நினைவுக்கு கொண்டு வரமுடியாததினால் உறவினர்களையும் , நண்பர்களையும் இந்த அழைப்பினை அன்போடு ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
(தயவுகூர்ந்து உங்கள் வருகையை text message அல்லது facebook inbox message மூலமாகவோ ஊர்ஜிதப்படுத்தும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்)
குடும்பத்தில் நடந்த இம் மிகத்துயர நிகழ்வு அறிந்து தொலைபேசியூடாகவும் , நேரில் வந்து தோளோடு தோள் நின்று எமக்கு ஆறுதல் வார்த்தை தந்தும் பல வழிகளிலும் உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது தாழ்மையான நன்றிகளை இத்தருணத்தில் கூறிக்கொள்கிறோம்.