4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
47
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சஜீவ் ரவிகுமார் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் ஆருயிர் புதல்வனே நீ எங்கு சென்றாய்
பண்பும் பாசமும் பணிவும் கொண்ட
எங்கள் அன்பு புதல்வனே
எங்களை நிர்க்கதியில் தவிக்கவிட்டு
நீ எங்கு சென்றாய்! உன் பிரிவை வெறும்
வார்த்தைகளால் கொட்டித் தீர்த்துவிட முடியாது மகனே
பார்க்கும் இடமெல்லாம் நாம் காணும்
காட்சிகள் எல்லாம் உன் அன்பு முகமே
எங்கள் மனதில் தோன்றுகின்றது
எல்லோர் மனதையும் அன்பால் வென்ற
உன்னால் அந்த காலனை மட்டும்
ஏன் வெல்ல முடியாமல் போயிற்று
கடைசிவரை எங்களுக்கு துணையிருப்பேன் என்பாயே
எங்கள் எல்லோரையும் தவிர்ப்பில்
ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டாயே!!
தகவல்:
குடும்பத்தினர்