5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
47
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சஜீவ் ரவிகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களை இமை காப்பது போல
நாம் காத்து வந்த எம் செல்ல மகனே!
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்
என வாஞ்சையுடன் நாங்கள்
கண்ட கனா ஏராளம்
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் செல்ல மகனே!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ?
அன்பான உன் உள்ளமதில் ஆசை மொழி
வார்த்தை இவையெல்லாம் நாம்
இழந்து
தவிக்கின்றோம்
நினைக்கின்ற வேளையில்
நெஞ்சம்
வெடித்து தவிக்கின்றோம்
நீ வான் உயரம் தெய்வத்தில்
ஒன்றாகி
நின்று எமையெல்லாம்
பார்த்திடுவாய் என
எண்ணி
ஐந்தாண்டு நினைவு நாளில்
விழியருவியாய் ஏங்கியே
நிற்கின்றோம்
உனைப்பார்த்து
உந்தன் ஆத்மா
சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திகின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்