1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
47
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சஜீவ் ரவிகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்...!
உன் அண்ணனை இழந்த துயரம்
அன்னைக்கு ஆறுதல் கொடுத்தவனே
அன்னையின் துயர் துடைத்து
அப்பாவின் ஏக்கம் தீர்த்து
அருந்துணையாய் இருந்திடுவாய் என்றிருந்தோம்
கண்இமைப் பொழுதிலே
எம் கனவுகளை எல்லாம் கனவாக்கி
கண் மறைந்து போனாயே
மனதை ஆழ்ந்த துயரில்
ஆக்கிபோனாய் - எம்
அன்புச் செல்வனே...
வருடங்கள் ஒன்றல்ல ஆயிரம்
கடந்தாலும் எம்மை
வருடிகொண்டேயிருக்கும் - உன்
நினைவுகள் எம் உயிரோடு...!!!
என்றும் உன் நினைவகளை நெஞ்சில் சுமக்கும்
அப்பா, அம்மா, சகோதரி
தகவல்:
குடும்பத்தினர்