லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சஜீவ் ரவிகுமார் அவர்கள் 02-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா(ஓய்வுபெற்ற அதிபர்- கனடா), பூபதி(ஓய்வுபெற்ற ஆசிரியை- கனடா) தம்பதிகள், காலஞ்சென்ற சண்முகராஜா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ரவிகுமார்(புன்னாலைகட்டுவன்) நளாயினி(வேலணை) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற முகேஸ்குமார், காயத்ரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேஸ்குமார்(ராகவன்- லண்டன்), ஜெயகுமார்(கனடா), அம்பிகைகுமார்(இந்தியா), நிமலகுமார்(கனடா), சதீஸ்குமார்(லண்டன்), தயாநிதி(பாரிஸ்) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
பூமகள்(லண்டன்), இலகுநாதன்(இலங்கை), வாமதேவன்(ஓய்வுபெற்ற அதிபர்- இலங்கை), ஸ்ரீனிவாசன்(பாரிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.