

குறுகிய காலத்தில் இணைப்பில் வந்து பாசத்துடன் பழகிய பண்பான நண்பனே வாசா எங்கு சென்றனை, பரிதவிக்கும் மனைவியை அப்பா என கூவியழைக்கும் பிள்ளைச்செல்வங்களை பிரிவுச்செய்தி கேட்டு கண்ணீரில் கரையும் நட்புள்ளங்களை விட்டு வெகுதூரம் சென்றனையோ. சொல்லுக்குள் சிக்கி கொண்ட பொருளாய் தவிக்கிறதே எமதுள்ளம்.உன்னுடன் பழகிய காலங்களில் யாமறியவில்லை உனதருமை அன்பு நண்பனே ,,இப்போ நல்ல சகோதரனை இழந்து தவிக்கிறோமய்யா. கட்டிய மனைவிக்காவும் பிள்ளைகளிற்காகவும் எப்போதும் சிரிப்புடன் இருசக்கரம் பூட்டி ஓடிய கால்கள் இன்று ஓய்ந்ததுவோ புன்சிரிப்புடன் எம்முன்னே தோன்றும் திருவதனம் இன்று மீளாத்துயில் ஆழ்ந்ததுவோ ,உன் கடமையை சரிவர முடிக்காமல் இடையில் முறித்து கொண்டு விண்ணுலகம் செல்ல ஏனிந்த அவசரமய்யா .வலிகொண்ட எம்மனதை எப்படியாற்றுவோம்.உன்னுடன் பழகிய பசுமையான நினைவுகள் பொக்கிஷமாக காலமுழுமைக்கும் போற்றுவோம் .உன் ஆத்மா சாந்தியடைய இறைவன் பாதங்களை கண்ணீர் பூக்களால் அர்ச்சிக்கின்றோம் .ஐயனே மீண்டொரு பிறப்புண்டேல் எங்கள் நண்பனாக வரவேண்டும் .
அன்பு சின்னபெடி, நீ எங்களை விட்டு சென்று ஆண்டு 3ஆகி இருக்கலாம் ஆனால் நீ இப்போதும் எப்போதும் எங்களுக்கு இருப்பதாக உணர வைக்கிறாய். காலங்கள் கடந்தாலும் எப்பொழுதும் எங்கள் காவலனாய் எம்முடன்...