யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rheinfelden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜதுரை திருப்பதிவாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனது ஆனாலும்
மாறாது எம் சோகம்
பிள்ளைகள்
நான் பார்த்த அழகிய முகம்
என் தந்தையின் முகம்தான்
நான் ரசித்த இனிய இசை நீங்கள்
பாடிய இனிய பாடல்கள் தான்
கடவுளுக்கும் அப்பாவிற்கும் சிறிய
வித்தியாசம் தான் கடவுள்
கண்ணுக்கு தெரியமாட்டார்
கண்ணுக்கு தெரிந்தும் கடவுள்
என பலராலும் நம்ப முடியாதவர் அப்பா
தங்கி இருந்த தாயின் கருவரை புனிதமானது
அதேபோல நாம் விழும்போது தாங்கிக்
கொள்ளும் தேழும் புனிதமானது
குழந்தையாக இருந்தபொழுது
உண்னை இறுக கட்டுயணைத்த படி
உன் அரவணைபிலும் பாதுகாப்பிலும்
வாழ்ந்த நாங்கள் மீண்டும்
வராதா என்று என் இதயம்
ஏங்குகின்றது அப்பா
பிள்ளைகளுக்கு மட்டும் கேட்ட வரம் கிடைக்கும்
தந்தை என்னும் தெய்வத்திடமிருந்து
என்னை விட்டு கடவுளிடம் சென்றீர்களே
உங்களின் பிரிவால் வாடுகிறேன் அப்பா
மனைவி, சகோதரங்கள்
உன் பிரிவால் தவிக்கும் மனைவியை மறந்தாயோ
உன் அணைப்பில் வைத்திருந்த அழகுயாவையும் அவளே
எங்கு சென்றாயோ தாங்க முடியாத துன்பத்தை நந்தாயோ
எம் நிம்மதி சந்தோசம் உன்னுடனே சென்றதோ
அன்புக்குரியவனே அழகின் திருவுருவே
ஆறு முகனை வேண்டிக் கடைத்த
எங்கள் கடைக்குட்டிம் நீயே
அன்பால் எம்மை வென்றவனே
அறிவால் உழைப்பை வென்றனே
சகோதரிகளின் வாழ்வை உயர்தியவனே
தந்தைபோல் நின்று காத்தவனே
எம்மை கரம்பிடித்து நின்றவனே
சகோதர பாசத்திற்கு வழிகாட்டி நீயே...
மருமகன்...
எங்கே போனாய் நீ எங்களை விட்டு
என்ன கோபம் என்மீது
நல்ல வாழ்வு குடுத்தாய்
நல்வழி காட்டினாய்
நான் வாழ கற்றுக்கொண்டதே
உன்னை பார்த்து தானே!
ஏன் எனது வாழ்க்கை பாடத்தை
இடையில் நிறுத்திவிட்டாய்.....
மிச்சத்தை நான் எப்படி எழுத...
உண்ணும் உணவில் நீ
உடுத்தும் உடையில் நீ
இந்த வாழ்க்கையே நீ போட்ட - பிச்சை தானே
இந்த கடமையை நான் எப்படி திருப்புவேன்
அங்கேயாவது நீ நிம்மதியார் இரு மாமா
ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி
உன் பிரிவால் தவிக்கும்
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்,
மக்கள், மருமகன், உறவினர்கள்.
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவு நிகழ்வு 19-01-2022 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை Zentrumstrasse 13, 4323 Wallbach, Switzerland எனும் முகவரியில் நடைபெறும்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
அன்பு சின்னபெடி, நீ எங்களை விட்டு சென்று ஆண்டு 3ஆகி இருக்கலாம் ஆனால் நீ இப்போதும் எப்போதும் எங்களுக்கு இருப்பதாக உணர வைக்கிறாய். காலங்கள் கடந்தாலும் எப்பொழுதும் எங்கள் காவலனாய் எம்முடன்...