சுவிஸ் Lausanne ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நிதர்சன் தாரணி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறு ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
அழியாத பொக்கிஷம் மகளே!
எம் வாழ்வில் தென்றலென
வந்துதித்த எம் செல்வமே
பண்பின் உறைவிடமாய்!
பாசத்தின் திருவிளக்காய்!
அறிவின் சிகரமாய் மிளிர்ந்த
எஙகள் அன்பு மகளே...
உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!
சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கிறது எங்கள் உள்ளங்களில்
அழியாத ஓவியமாக
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கின்றது
உன் வரவை எதிர் பார்த்து
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது...
அக்கா நீங்கள் தான் எங்கள்
உயிர் மூச்சு எல்லாமே.
அக்கா இது எங்கள் உள்ளக்
குமுறலை புலம்புகிறேம்...
எஙகள் உயிராய் உடலாய் உதிரமாய்
எங்களுக்குள்ளே நீ இருக்கும் போது பிரிவென்பதேது?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!