திதி:16-11-2025
சுவிஸ் Lausanne ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நிதர்சன் தாரணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்று வரை நாம் ஐந்து வருடங்கள் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை..
கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்..
வாழ்வினிலே சிறந்து வளமாக வாழ்ந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்ற
காரணத்தை நாம் அறியோம்?
துடுப்பு இல்லாத படகு போல
சிறகு இல்லாத பறவை போல
திசையறியாது தவிக்கின்றோம்
துடிக்கின்றோம்- வந்துவிடம்மா....
அக்கா நாங்கள் எந்த ஒரு
கணமும் உங்களுடன் வாழ்ந்த
வாழ்க்கையை மறக்கவில்லை
அப்படி மறந்தால் நாங்கள்
எங்களையே மறந்தாகிவிடுவோம்
அக்கா நீங்கள் தான் எங்கள்
உயிர் மூச்சு எல்லாமே.
அக்கா இது எங்கள் உள்ளக்
குமுறலை புலம்புகிறேம்...
எஙகள் உயிராய் உடலாய் உதிரமாய்
எங்களுக்குள்ளே நீ இருக்கும் போது பிரிவென்பதேது?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!