சுவிஸ் Lausanne ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நிதர்சன் தாரணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு மகளே…
எங்களுக்கு முதல் முதலாக
வந்து மலர்ந்த முல்லை பூப்போல்
வெள்ளை வெளேர் என்று பிரகாசித்தாய் மகளே…
எங்களோடு நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும்! எங்களுக்கு ஆறுதலாய்
இருப்பாய் என்றிருந்தோம்!
அத்தனையும் கனவாக்கி
எங்கு சென்றாய் செல்லமே! கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில் நடந்தவைகள்
நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ?
நாங்கள் பார்க்கும் திசையெல்லாம்
உன் உருவமே தெரிகிறது செல்லமே!!
நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய் நாம் இருப்போம்
வாராது சென்றதனால் தீராது
சோகமம்மா!!! நீங்கள் இல்லா வெறுமை
உலகத்தில் உங்கள் நினைவுகளுடன்
எம் பயணம் நாளும் தொடர்கிறது…
அப்பா, அம்மா
——————————————————————————————————————-
அக்கா நீங்கள் எங்களை விட்டு
பிரிந்து இரண்டு ஆண்டுகள்
என்ன இரண்டாயிரம்
ஆண்டுகள் ஆனாலும் எங்களுடன்
தான் வாழ்ந்த கொண்டிடுப்பீர்கள்
அக்கா நாங்கள் எந்த ஒரு
கணமும் உங்களுடன் வாழ்ந்த
வாழ்க்கையை மறக்கவில்லை
அப்படி மறந்தால் நாங்கள்
எங்களையே மறந்தாகிவிடுவோம்
அக்கா நீங்கள் தான் எங்கள்
உயிர் மூச்சு எல்லாமே.
அக்கா இது எங்கள் உள்ளக்
குமுறலை புலம்புகிறேம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தங்கை, தம்பி