சுவிஸ் Lausanne ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நிதர்சன் தாரணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பில் வந்த மூத்த முத்தே பவா சிப்பிக்குள்
முத்துப்போல் வந்தாயே இன்று உன் உயிர் சிப்பிக்குள்
முத்துப்போல் எங்கள் இதய சிப்பிக்குள் மூடி உள்ளது
செல்ல மகளே நீ எங்களை விட்டு என்றென்றும் பிரியப்போவது
இல்லை ஆண்டாண்டு காலம் ஆனாலும் நாங்கள் உம்மை
மறக்க போவது இல்லை பவா நீ எங்களுடன் வாழ்ந்த
காலங்கள் எல்லாமே பொன்னான பொக்கிசமான காலங்கள்
அதனை நாங்கள் எங்கள் இதயம் என்னும் கூட்டிற்குள்
பாதுகாத்து வைத்துள்ளோம் அன்பு மகளே நீர் எங்களுடன்
தான் இருக்கிறீர் ஆசை மகளே பவா பிரிவென்று உனக்கில்லை
மண்ணில் பரிவோடு எம் பக்கம் இருக்கின்றீர் இப்படிதான்
எண்ணிக் கொள்வோம் போகும் வழியில் நாமினையும் வரை!!
எங்கள் உயிர் அக்கா
அக்கா என்கிற சொல்லை நாம் தினமும் உச்சரிப்போம்
அக்கா நீங்கள் எங்களுக்கு ஒரு வரம் அக்கா நானும்
தம்பியும் தூண்டிலில் அகப்பட்ட மீன் போல் துடிக்கிறோம்
அக்கா நீங்கள் மற்றவர் துயர் கண்டு துடிப்பீர்களே
அக்கா நாங்கள் உங்களை நினைத்து கதறுகிறோம் அக்கா
நீங்கள் எங்களுடன் வாழ்ந்த காலங்கள் அனைத்தும்
பொற்காலங்கள் அது கருங்கல்லில் செதிக்கிய சிற்பம்போல்
அழியாது அக்கா நீங்கள் எங்களைவிட்டு போனதாக நாங்கள்
ஒரு நிமிடம் கூட நினைத்து பார்ப்பது இல்லை என்றும்
எங்களுடன் தான் இருக்கிறீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
அப்பா, அம்மா, தங்கை, தம்பி.