4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நிதர்சன் தாரணி
Master Of Science in International Business Development
வயது 30
Tribute
68
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
சுவிஸ் Lausanne ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நிதர்சன் தாரணி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் நித்திலமே
உன்னைக் காணாத எம் கண்கள்
நித்திரையைத் தொலைத்துவிட்டு
கண்நீரை வடிக்குதம்மா !
பாசமாக வளர்த்த பூமகளே - உந்தன்
நேசம் மறப்பது எவ்வாறு
காலன் வந்து எடுத்தானோ - எங்கள்
இனிய மகளே உன் உயிரை
வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் இறப்பால்
நான்கு ஆண்டு போனால் என்ன
பல ஜென்மம் கடந்தால் என்ன?
மண்ணில் மதிப்போடு மலர்ந்திட்ட பொன்மகளே!
நீ விண்ணில் கலந்திட்ட நாள் முதலாய்
நம் விழிகள் உறங்கிட மறுக்குதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
அப்பா, அம்மா, தங்கை, தம்பி