3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நிதர்சன் தாரணி
Master Of Science in International Business Development
வயது 30
Tribute
68
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
சுவிஸ் Lausanne ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நிதர்சன் தாரணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-11-2023
கண் வைத்தானோ - அந்த
இரக்கமற்ற கொடிய காலனவன்
விளையாடி ஆசை காட்டி - நீ
மறைந்து சென்ற மாயம் என்ன?
இறப்பு என்பது இயல்பானதென்பர்
இளமையில் இறப்பு இயல்பாகுமா?
உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!
சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கிறது எங்கள் உள்ளங்களில்
அழியாத ஓவியமாக
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கின்றது
உன் வரவை எதிர் பார்த்து
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது...
எஙகள் உயிராய் உடலாய் உதிரமாய்
எங்களுக்குள்ளே நீ இருக்கும் போது பிரிவென்பதேது?
தகவல்:
அப்பா, அம்மா, தங்கை, தம்பி