சுவிஸ் Lausanne ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நிதர்சன் தாரணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நானும் நீரும் ஒருவரை ஒருவர் விரும்பி பல கற்பனைகளுடன்
இறுதி காலம் வரை சேர்ந்து இருப்போமென நினைத்து கரம் பிடித்தோம்
ஆனால் இன்று என்னை இடை நடுவில் தவிக்கவிட்டு செல்வீர் என நான்
கனவிலும் நினைத்து இருக்க இல்லை என் மனம் தாங்க முடியாமல்
தவிக்கிறது இதயம் அழுகிறது இது உமக்கு கேட்கிறதா? இன்று
உமது 31ம் நாள் இதை என்னுள் என் மனம் ஏற்க மறக்கிறது
எங்கு இருந்தாலும் நீர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும்
உமது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று
இறைவனை வேண்டிநிற்கிறேன்.....
அன்பு
கணவன்
எங்களின் அன்பில் வந்த முதல் செல்வம் நீர் இன்று எங்களை
தவிக்கவிட்டு நீண்ட தூரம் சென்றுவிட்டாய் இதை எங்கள் மனம்
ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறோம் மகளே இன்றுடன்
31 நாள் ஆகிவிட்டது மகளே எப்போ வந்து அம்மா என்று உன்
வாயால் கூப்பிடபோகிறாய் என் பெத்த வயிறு எரிகிறது மகளே
எங்கள் கதறல் சத்தம் உனக்கு கேட்கிறதா? எங்களை ஆறாத்
துயரில் மீளமுடியாமல் விட்டு சென்று விட்டாய் மகளே எங்கள்
அன்பு செல்வமே உமது ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
உமது உயிர்
அப்பா, அம்மா
எங்களின் ஆசை அக்கா என்னையும் தம்பியையும் ஏமாற்றிவிட்டு
போக எப்படி தான் உங்களுக்கு மனம் வந்தது அக்கா
உங்களின் 31ம் நாள் இன்று ஆனாலும் அக்கா உங்களின் புன்சிரிப்பும்
பாசமான கதையும் எங்களால் மறக்கமுடியவில்லை
அக்கா உங்கள் பிரிவை என்னாலும் தம்பியாலும் தாங்க
முடியாமல் நித்தமும் கண்ணீர் வடிக்கிறோம் அக்கா நீங்கள்
எங்கு இருந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும்
என்று நானும், தம்பியும் கடவுளை மன்றாடி வேண்டி நிற்கிறோம்
உங்கள் ஆசை
தங்கச்சி, தம்பி
எங்கள் அன்பு செல்வத்தின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.