Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 AUG 1999
இறப்பு 02 APR 2019
அமரர் மதுஜன் நடராஜா
வயது 19
அமரர் மதுஜன் நடராஜா 1999 - 2019 பேர்ண், Switzerland Switzerland
Tribute 58 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 15-04-2026

சுவிஸ் Bern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதுஜன் நடராஜா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
 கடவுளும் கல்லாய் போனானே
 எம் செல்லம் கால் பதித்த போது
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?

பூத்த நினைவது வாடுமுன்னே
பூமியை விட்டு போனவனே
 மகனே என அணைக்க முடியாத
 சோகத்தால்- எம் மனம் இருண்டு போய்
 உள்ளதைய்யா.!

வாய் விட்டுச் சொல்லவும்
வார்த்தையில்லை மனம் விட்டுப் பேசவும்
 இன்று நீ இல்லை

என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
 எது என்று தெரியாது?

மொட்டாகி பூவாகி காயாகி
 கனியாகும் வேளையில் காத்திருந்து
 படைத்தவன் பழி தீர்த்தானோ ?
 எங்களை தவிக்க விட்டு நீர்
தூரமாய் சென்றதென்ன?

ஏழு ஆண்டுகளாகியும்
இறக்கவில்லை உன்னுடைய
இனிமையான நினைவுகள்!
மறக்கவில்லை உன்னுடன்
மகிழ்ந்திருந்த காலங்கள்!
எண்ணி எண்ணிப் பார்க்கின்றோம்
என்றைக்கும் வாழ்வாய் நீ!

எம் உயிர் உள்ளவரை
உன் ஆத்மா எம்மோடு கதை பேசும்
நீங்காத நினைவுகளாய்
என்றைக்கும் வாழ்வாய் நீ!

உன் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos