சுவிஸ் Bern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதுஜன் நடராஜா அவர்களின் 45வது நாள் நினைவஞ்சலி.
மாமி மாமி என்று மனமுருக அழைப்பாயே
மனம் நிறைந்த மருகோனே மதுஜனே – உன்
ஆவி அடங்கிய சேதி கேட்ட கணம்
முதலாய் அந்தரித்து அரற்றிக் கிடக்கின்றோம்.
புன்னகைத்து பத்தொளியூட்டும் உன் பூமுகம்
களை இழந்து கருகிக் கிடக்கிறதே நெஞ்சமெல்லாம்
விம்மி வெடிக்கிறதடா
நீ நீள் துயில் கொள்ளும் கோலம் கண்டு
ஆசை மருகோனே அலறித் துடிக்கின்றோம்.
நேசமோடு நாம் வளர்த்த பிள்ளை
நீ நீட்டிக் கிடக்க பேச
மொழியின்றி பிதற்றிக் கிடக்கின்றோம்.
பாசமொழி பேசும் பகலோனே புன்னகைத்து வந்திடெடா
தேசம் விட்டு வந்தோம் உயிர் காக்க
தேடி வந்து எமன் உனை பறித்துச் செல்ல
தேற்ற வழியின்றி பிதற்றி கிடக்கின்றோம்
நேச மருகோனே ஓடி வந்திடெடா……!
உங்கள் பிரிவால் துயருறும்
பாச மாமியார் குடும்பம்
திரு. திருமதி விக்கினேஸ்வரன் மகேஸ்வரி
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
எனது மகனின் மறைவுத் துயரில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன் 18-05-2019 சனிக்கிழமை அன்று நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் திரு.மதுஜன் நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் பார்த்தேன்.கவலையாக உணர்ந்தேன்.ஏனென்றால் இன்றைக்கு அன்பான ஒருவரை மரணத்தில இழக்கிறதை யாராலும்...