சுவிஸ் Bern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதுஜன் நடராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களை இமை காப்பது போல நாம்
காத்து வந்த எம் செல்ல மகனே!
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்
என வாஞ்சையுடன் நாங்கள்
கண்ட கனா ஏராளம்
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் ஐயா!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
அன்பான உன் உள்ளமதில் ஆசை மொழி
வார்த்தை இவையெல்லாம் நாம்
இழந்து தவிக்கின்றோம்
நினைக்கின்ற வேளையில் நெஞ்சம்
வெடித்து தவிக்கின்றோம்
19 ஆண்டுகள் எம்மோடு
வாழ்ந்திட்ட எம் செல்வமே நீ
செதுக்கிட்ட நினைவுகள் ஏராளம் எமக்கு
நீ வான் உயரம் தெய்வத்தில் ஒன்றாகி
நின்று எமையெல்லாம் பார்த்திடுவாய் என
எண்ணி ஈராண்டு நினைவு நாளில்
விழியருவியாய் ஏங்கியே
நிற்கின்றோம் உனைப்பார்த்து ..
உனது நண்பர்கள் அன்று முதல் இன்று வரை
உனது குடும்பத்தினருடன் நண்பர்களாக இருக்கின்றனர்
அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தொடர்ந்து இந்த உறவு நீடிக்கவேண்டி
இறைவனை வணங்கி நிற்கின்றோம்.
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் திரு.மதுஜன் நடராஜா அவர்களின் மரண அறிவித்தல் பார்த்தேன்.கவலையாக உணர்ந்தேன்.ஏனென்றால் இன்றைக்கு அன்பான ஒருவரை மரணத்தில இழக்கிறதை யாராலும்...