திதி திகதி : 16/11/2026
பிரான்ஸ் Drancy ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆகாஸ் திருலோகசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
பதினான்கு வயதில் எங்களை விட்டுப் பிரிந்தாய்,
பன்னிரண்டு ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியவில்லை...
உன் சிரிப்பின் ஒலி இன்னும் எங்கள் மனதில்,
உன் இனிய நினைவுகள் என்றும் எங்கள் விழிகளில்...
கையில் பிடித்த உன் விரல்கள் இன்று இல்லை,
கூடிப் பேசிய அந்த நாட்களும் இன்று இல்லை...
ஆனால் எங்கள் இதயத்தில் நீ என்றும் வாழ்கிறாய்,
ஒவ்வொரு நாளும் உன்னை நினைத்து ஏங்குகிறோம்...
காலம் நகர்ந்தாலும் காயம் மட்டும் ஆறவில்லை,
உன் நினைவுகள் மட்டும் எங்களை விட்டு நீங்கவில்லை...
வானில் ஒரு நட்சத்திரமாய் நீ ஒளிர்ந்தாலும்,
எங்கள் மனதில் என்றும் எங்கள் செல்ல மகனாய் இருப்பாய்...
பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தாலும்,
உன்னை இழந்த வலி என்றும் குறையாது...
எங்கள் உயிர் உள்ளவரை உன் நினைவு அழியாது,
என்றும் எங்கள் அன்பு மகனே...
நீ எங்கள் நினைவில் வாழ்வாய்.
தொடர்புகளுக்கு
- Mobile : +33624185124