6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
52
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
பிரான்ஸ் Drancy ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆகாஸ் திருலோகசிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் கண்ணின் மணியே ஆகாஸ் குட்டி
எம்மை விட்டு எங்கு சென்றாயோ
ஆண்டு ஆறு என்றாலும்
ஆறவில்லை எம் மனது
உன் முகம் பாராமல் உன்குரல் கேளாமல் - எம்
உள்ளம் உறையுதடா
உன் உதட்டோரப் புன்னகை
காணாது உள்ளம் வாடி நிற்குதடா
உனை நினைத்து நித்தம் கலங்கும் உன்
அக்காமார் உனையே உருவான உன்
தம்பி அஸ்வின் நித்தம் உன் படம் பார்த்து
எப்போ வருவார் அண்ணா என கேட்டும் போது
என்ன சொல்ல நெஞ்சம் வலிக்குதடா செல்லம்
உன்னைப் பற்றி என்றும் புலம்பும் உன் அப்பா
உன்னை நினைத்து நித்தம் வாடும் உன் அம்மா
இன்று உன் நினைவு நாளில் எம்
கண்ணீர்ப் பூக்களை காணிக்கை ஆக்குகின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்