Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 JUL 2000
இறப்பு 30 OCT 2014
அமரர் ஆகாஸ் திருலோகசிங்கம்
வயது 14
அமரர் ஆகாஸ் திருலோகசிங்கம் 2000 - 2014 பிரான்ஸ், France France
Tribute 52 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

பிரான்ஸ் Drancy ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆகாஸ் திருலோகசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐந்தாண்டுகள் இன்றுடன்
முடிந்தாலும் இறுதிவரை
எம் நெஞ்சில் ஆறாது
உன் நினைவுகள்.... 

 அன்பு கொண்ட உம் நெஞ்சங்கள்
அஞ்சி ஏங்கும் அவலக்குரல்
அலைகளாக உம் காதுகளை
அடைகிறதா தெரியவில்லை
ஆண்டவனை வேண்டுகிறோம் - உம்
ஆத்ம சாந்திக்காக

அன்பே என்னுயிரே பாசம் நிறைந்த மகனே!
நீ இல்லா வீட்டில் புன்னகையும் மறைந்து போயிற்று
வசந்தம் தொலைந்து ஐந்தாண்டுகள் சென்றிருந்தாலும்
வாசணை மட்டும் என்றும் அழியாது

அன்பான அப்பா பாசமான அம்மா
ஆசைமிக்க ஆஷா(பிரியங்கா), மதுஷா அக்காமார்
உன் நிழல் போல் உருவான அருமைத் தம்பி அஸ்வின்
அரவணைத்த உறவுகள், மற்றும் உறவினர்கள்
அத்தனை பேரும் உன் புதிய உதயத்தை
இத்தரணியில் வேண்டுகின்றோம்
இறைவனிடம் யாசிக்கின்றோம்! நீ மீண்டும் வருவாயாக ஆகாஸ்!


உன் பிரிவால் துயருறும் அம்மா, அப்பா,அக்காமார் ஆஷா, மதுஷா, தம்பி அஸ்வின்,  மற்றும் உற்றார், உறவினர்


தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos