9ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜித்தா பவளராஜா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பல கடந்தாலும் உன்
அன்பினால் வாழ்கின்றேன்
உறவு பல இருந்தாலும்
உன் உண்மையால் வாழ்கின்றேன்
எதிர்பார்க்கவில்லை உன் பிரிவை
வாழ்கின்றேன் உன் அரவணைப்பில்
தவிக்கின்றேன் உன் பிரிவால்
வாழ்கின்றேன் உன் நிழலாய்
கனவில் நீ வரும்பொழுது
தேடுகின்றேன் நீ வருவாய்யென்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றேன் தனிமையாய்
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்
எப்போது நீ வருவாய் என்று
காத்திருக்கின்றேன் உன் நிழலாய்.
தகவல்:
கணவர் மற்றும் பிள்ளைகள்