Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 23 AUG 1982
விண்ணில் 08 SEP 2016
அமரர் விஜித்தா பவளராஜா
வயது 34
அமரர் விஜித்தா பவளராஜா 1982 - 2016 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜித்தா பவளராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

கரம்பிடித்தவனோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?

என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தவிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்பு மனைவியே!

கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால் 

அன்பான அம்மா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...!!!

தகவல்: கணவர் மற்றும் பிள்ளைகள்

Photos