4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 AUG 1982
இறப்பு 08 SEP 2016
அமரர் விஜித்தா பவளராஜா
வயது 34
அமரர் விஜித்தா பவளராஜா 1982 - 2016 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜித்தா பவளராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் நான்கு கடந்தாலும் உன்
நினைவுகள் உள்ளத்தை விட்டு அகலாது

எதிர்பார்க்கவில்லை உன் பிரிவை
வாழ்கின்றேன் உன் அரவணைப்பில்
தவிக்கின்றேன் உன் பிரிவால்
வாழ்கின்றேன் உன் நிழலாய்

தேடி வந்து அன்பு செய்தாய்
நாடி வந்து ஏற்றுக்கொண்டாய்
நடுவழியில் விட்டு விட்டு ஒரு
கனவுபோல் மறைந்து விட்டாய்

விழி போல நீயிருந்தாய் என்றும்
நீர் சிந்தும் விழியானோம் இன்று!
பூவுலகத்தில் சொர்க்கத்தை நீ தந்தாய் அன்று
விண்ணுலகில் சொப்பனமாய் ஏன் சென்றாய் இன்று..?

நீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை
பாசம் என்ற பந்தத்தை அள்ளிதந்து
பாதியில் ஏன் நிறுத்தி சென்றாயம்மா
நீயில்லாமல் நாம் படும் அவலநிலை
யார் அறிவார்கள்

முழு நிலவு போன்ற உன் முகம்
முன் வந்து கலங்க வைக்க
நித்திரையும் தொலைந்தது

நான்கல்ல நாற்பது ஆண்டுகளென்றாலும்
நீ நம் மனதில் வாழ்ந்து கொண்டேயிருப்பாய்

எப்போது நீ வருவாய் என்று
காத்திருக்கின்றேன் உன் நிழலாய்
உன் அன்பின் கணவர், பிள்ளைகள். 
 

தகவல்: கணவர், பிள்ளைகள்

Photos

No Photos

Notices