5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜித்தா பவளராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்று வரை நாம் ஐந்து வருடங்கள் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை..
கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்..
வாழ்வினிலே சிறந்து வளமாக வாழ்ந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்ற
காரணத்தை நாம் அறியோம்?
துடுப்பு இல்லாத படகு போல
சிறகு இல்லாத பறவை போல
திசையறியாது தவிக்கின்றோம்
துடிக்கின்றோம்- வந்துவிடம்மா....
பாருலகம் கண்ணீரை
மழையெனவே சிந்திடுதே- நீ
வானுலகம் சென்றாலும் உன் நினைவதுவோ
எம் நெஞ்சில் என்றும் அகலாது ...!
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு
பொழுதும் உம் நினைவுகளில்
என்றும் மாறாத நினைவுகளுடன்
கணவர், பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்