5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lugano வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயரூபி மகேந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆனாலும்
அழியவில்லை என் சோகம்
எத்தனை யுகங்கள் ஆனாலும்
உன் நினைவு என்னை விட்டு அழியாது!
மாறாது என் துயர்
மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் என்னை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ?
காலங்கள் போகலாம்,
காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உன் நினைவுகள்
என்றும் என்னை விட்டு போகாது
உன் நினைவுகளை காலமெல்லாம்
நான் சுமந்து நிற்பேன்
வையகத்தில் நான் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உன் நினைவு நிழலாடும்
உந்தன் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை
காணிக்கையாக்குகின்றேன்....
தகவல்:
மகேந்திரன் (கணவர்)