4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
16
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lugano வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயரூபி மகேந்திரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
மலர்ந்த பூவொன்று
வாசனையை பரவச் செய்து
வசந்தத்தை பறித்துச் சென்றது .....
நினைவுகள் நித்தம் வந்து
நிம்மதியை தொலைக்கின்றது .....
வருமா மீண்டும் வசந்தம்
என்ற
தொடரான கேள்வியோடு
தொடர்கின்றது என் கண்ணீர் பயணம் .....
ஏக்கம் மட்டும் மிஞ்ச
நீர்த்துளிகள் நிறைகின்றன....
காலங்கள் கரைந்தாலும்
ஆயிரம் உறவுகள் என் அருகில் இருந்தாலும்
என் கண்களில் ஒளிரும்
உன் அன்பின் வெளிச்சம் நீங்காது .......
உன்னைப் பிரிந்த நாள் முதல்
இன்று வரை,
உன் அன்பிற்கு
இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் என் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய்
என்னைக் கொல்கிறது.
உந்தன் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
தகவல்:
மகேந்திரன் (கணவர்)