1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lugano வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயரூபி மகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் செல்வமே
உன்னோடு நான் வாழ்ந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மண்ணோடு நான் போகும் நாள்
வரையும் நிலைத்திருக்கும்.
பள்ளிச்சிறுவர்களாய் ஆரம்பித்து,
பாடசாலை மாணவர்களாகி,
கல்லூரித் தோழர்களாய் வளர்ந்த
எம் அன்பு இறுதியில்
காதலாய் மலர்ந்து வளர்ந்து
நாம் ஒன்றிணைந்தோம்.
மனைவிக்கு மனைவியாய்,
தாய்க்குத்தாயாய்,தங்கைக்குத்தங்கையாய்,
என் வலது கரமாக இருந்து
என்னை வழிநடத்திய என் செல்வமே
காலன் உன்னைப் பறித்துவிட்டானே..
இன்று சிறகொடிந்த பறவைபோல்,
திசை தெரியாத்தோணிபோல்,
யாருமற்ற அனாதையாக நிற்கின்றேனே....
என் குரல் கேட்கின்றதா விஜி..?????
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"
தகவல்:
கணவர்