யாழ். குடத்தனையைப் பிறப்பிடமாகவும், முகமாலையை வசிப்பிடமாகவும், பரந்தனை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலன் சுப்பிரமணியம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-11-2026
ஆண்டுகள் ஏழு சென்றாலும்
ஆறாது எங்கள் துயரங்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்!
உங்கள் நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து நிற்கின்றோம்!!
ஆயிரம் பேர் ஆறுதல் கூறினாலும்
உங்கள் பிரிவை நெஞ்சம் மறுக்குதப்பா!
நேற்றுப் போல் இருக்கின்றது
நாங்கள் வாழ்ந்த இன்ப வாழ்க்கை
யார் கண் பட்டதோ எங்கள் குருவிக்கூடு கலைந்து
ஆண்டுகள் ஏழாகி விட்டது.
அன்பிற்கே சாவு என்றால் அகிலமே தாங்காதப்பா!
எம்முயிர் அப்பா வந்து விடுங்கோ!
ஏங்கி நாம் தவிக்கின்றோம்.
இந்த மண்ணில் உங்களைப் போல் யார் வருவார்?
எம் துயர் போக்க எண்ணிப் பதை பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!
Rest in peace