யாழ். குடத்தனையைப் பிறப்பிடமாகவும், முகமாலை, பரந்தன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலன் சுப்பிரமணியம் அவர்கள் 28-10-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதி வேலன், சீதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனுசியா(சுவிஸ்), சுகந்தன்(பிரான்ஸ்), சுகந்தினி(இலங்கை), கோகிலா(பிரித்தானியா), தியாகி நிதர்சன், சிவகுகன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறீபாஸ்கரன்(சுவிஸ்), சந்திரயாமினி(பிரான்ஸ்), சசிக்குமார்(இலங்கை), பிரசாத்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரீஸ், கவீஸ்(சுவிஸ்), சாதுரியன், சங்கீத், கபிசாந்(இலங்கை), யெய்டன், அனிக்கா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2019 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணியவில் பரந்தன் கோறக்கன்கட்டு இந்து மயானத்தில பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace