5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலன் சுப்பிரமணியம்
(பச்சிலைப்பள்ளி பிரதேச கூட்டுறவு முகாமையாளர், புதுக்குடியிருப்பு இணைய கூட்டுறவு முகாமையாளர், வடமாகாண பேரிணைய முகாமையாளர்)
வயது 69
Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:02/11/2024
யாழ். குடத்தனையைப் பிறப்பிடமாகவும், முகமாலையை வசிப்பிடமாகவும், பரந்தனை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலன் சுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து போனாலும் அழியாது
நம் சோகம் மீளாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ!
எங்கள் வீட்டு நிலவாக
ஒளி வீசி மகிழ வைத்தீரே
யார் கண்பட்டு மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்போல
நாங்கள் உமைப்பிரிந்து
தத்தளித்து மனம் ஆடுகின்றதே
உங்கள் அன்பை தோற்கடிக்கும்
மற்றொரு அன்பை இவ்வுலகில்
யாரும் தரப்போவது இல்லை அப்பா
உங்களை தவிர!!!
எத்தனை வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!
உங்கள் ஆத்மா ஆண்டவனின்
திருவடியில் அமைதி பெற வேண்டுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace