Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 02 JUL 1950
மறைவு 28 OCT 2019
அமரர் வேலன் சுப்பிரமணியம்
(பச்சிலைப்பள்ளி பிரதேச கூட்டுறவு முகாமையாளர், புதுக்குடியிருப்பு இணைய கூட்டுறவு முகாமையாளர், வடமாகாண பேரிணைய முகாமையாளர்)
வயது 69
அமரர் வேலன் சுப்பிரமணியம் 1950 - 2019 குடத்தனை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காக திகழ்ந்து எமையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு 28-10-2019 திங்கட்கிழமை இறைபதம் அடைந்த அமரர் வேலன் சுப்பிரமணியம் அவர்களின் இறுதி நிகழ்வில் பங்குபற்றியோரிற்கும் பல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்த அனைத்து உள்ளங்களிற்கும் நேரில் வந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தொலைபேசி ஊடாகவும் இணையத்தளங்கள் ஊடாகவும், ஆறுதல் செய்தி கூறியோரிற்கும், கண்ணீர் அஞ்சலிப் பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு அஞ்சலி செலுத்திய அனைவரிற்கும் இறுதி நிகழ்வின்போது தங்களது உணர்வுகளை உரையாகப் பகிர்ந்த அனைவரிற்கும் இறுதி நிகழ்வுகள் அனைத்தையும் நேரலை ஒளிபரப்பு செய்த நாவற்குழி SM Creation Video குழுவினருக்கும், இறப்புச் செய்தியை பிரசுரித்த லங்காசிறி இணையத்தள மரண அறிவித்தல் குழுமத்தினருக்கும், புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் பிள்ளைகளின் இல்லங்களிற்கு நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் ஆறுதல் கூறிய அனைவரிற்கும், இவ்வேளையில் உணவுகள், சிற்றுண்டிகள் வழங்கி உதவியோரிற்கும், ஈமக்கிரியையின்போது ஈரமனதோடு பங்குகொண்ட அனைவரிற்கும், அந்தியேட்டி, வீட்டுக்கிருத்திய அழைப்பிதழை வடிவமைத்து உதவிய பரந்தன் அகரன் பதிப்பகத்தினரிற்கும் நினைவு மலரிற்கான உணர்வுப் பகிர்வுகளை உரிய நேரத்திற்கு வழங்கியோருக்கும், நினைவு மலரினை சரியான முறையில் தொகுத்து குறுகிய காலத்தில் சிறந்த முறையில் வடிவமைத்து தந்த கிளி வேழன் பதிப்பகத்தினருக்கும் 25-11-2019 அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரை கிரியை நிகழ்விலும் 27-11-2019 புதன்கிழமை இன்று நடைபெற்ற வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் பங்குகொண்ட எல்லோருக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.