Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 OCT 1946
இறப்பு 01 APR 2013
அமரர் வைத்திலிங்கம் சந்திரசேகரம்
அருட்பணி அரசு சிவநெறிச்செல்வர், ஸ்தாபகர் மாணிக்க விநாயகர் ஆலயம்- பாரிஸ்
வயது 66
அமரர் வைத்திலிங்கம் சந்திரசேகரம் 1946 - 2013 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் சந்திரசேகரம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.      

இமைப்பொழுதும் தன்நெஞ்சில்
இறைவனையே சிந்தித்து
ஈடில் புகழ் பரப்பி
இறுமாந்து இருந்த வேளை
பாரிசில் மக்களுக்கு
பரம் பொருளாம் மெய்யினையே
முக்கண்ணன் தன்மகனாம் மூலக் கணபதியை
பண்புடனே பரிசளித்து ஞாலம் புகழ்ந்தேத்த
நன்மை பல புரிந்து நின்று
கருத்தாக பல சேவை புரிந்திட்ட காரணத்தால்
அருட்பணி அரசாக அமர்ந்து இருந்து
ஐங்கரன் அருளாலே அனைவரும் சிறக்க
ஆலயம் அமைத்து ஆன்மீக அன்பனாய்
அருட்பணி ஆற்றி
சிந்தை மகிழ சிவநேயம் மலிய
சொந்த முயற்சியால் சோர்வின்றி உழைத்து
சஞ்சல மின்றி சாகா நெறியில்
சைவநெறியை சார்ந்தினிதிருந்து
சுந்தரமுகத்துடன் செய்யும் பணியில்
சந்திரசேகரம் என்னும் நாமம்
சார்ந்து இருக்கும் பணிகள் அனைத்தும்
செம்மையாய் ஓங்கி சிறந்து விளங்கும்
திரிபுரம் எரித்த சிவனார் மைந்தன்
பாரிஸ் மாநகரில் பவனி வருவதை
அவனியில் அனைவரும் கண்டு மகிழ
அற்புதம் படைத்த வித்தகர் நீங்கள்
மூவுலகும் தொழும் முக்கண்ணன் மைந்தன்
குருவடிவாகி பாரிஸ் மாநகரில்
திருவடி வைத்து திறமிகு பொருளாய்
எம்மை அறிவித்து எமக்கு அருள்செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
அருள் தரும் ஆனந்தம் அள்ளி வழங்கி
எல்லை இல்லா ஆனந்தத்தை
என்றும் எமக்கு அள்ளி வழங்கி
அல்லல் களைந்து அருள் நெறிதன்னில்
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
ஆனை முகனின் அடி நிழல் ஒன்றி
அனைவரும் ஒன்றாய் மகிழ்ந்து வணங்க
அன்பும் அறமும் தழைத்து ஓங்க
அடியவர் மனம் அயராது சிறக்க
கொண்ட கொள்கையில் குன்றாதழைத்த
திண் தோள் மணிவண்ணன் நீங்கள்
காலம் கடந்தும் எம்மவர் மனங்களில்
உங்கள் அன்பும் உழைத்த உழைப்பும்

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!

"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" (திருவாசகம்)

08-04-2026 புதன்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு பாரிஸ் மாணிக்க விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் ஸ்தாபகர் நினைவுப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் அன்னதான நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos