யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் சந்திரசேகரம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிலே சிறந்து அறப்பணி புரிந்து
ஆராய்ந்து அறிந்து ஆலயம் அமைத்தீர்
ஐரோப்பாவின் முதல் ஆலயமாய்
அறப்பணி புரியும் முதன்மை நிலையமாய்
எம்மவரின்றி ஐரோப்பியரும்
எற்றம் காண வேண்டியே நின்றீர்!
நலம் பல வேண்டி நம்மவரோடு
மேற்குலகோரும் மாண்புற வணங்கும்
மேன்மை கண்டு மாட்சிமை கொண்டீர்.
”மண்ணிலில் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும்
அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்”
காலம் அறிந்து கருத்தினில் சிறந்து
தேவை அறிந்து திரவியம் தேடி
நல்லோர் பலரும் நன்மை பயக்கவே
நானிலம் போற்றும் ஆலயம் அமைத்தீர்!
வித்தக விநாயகன் துணையது நிற்க
விருதுகள் பலபெற்று வையகம் இதிலே
விநாயகன் பணியை விருப்புடன் புரிந்தீர்
ஆண்டிலே வரும் அத்தனை நிகழ்வையும்
ஆலயம் அதிலே சிறப்புற நடாத்தி
ஆன்மீக உலகின் அறப்பணிச் சாலையாய்
மாணிக்க விநாயகர் ஆலயம் அதனை
கண்ணைக் காக்கும் கண்ணிமை போல
காத்து நின்று கடமையில் சிறந்தீர்
ஐரோப்பியரின் கல்வித் திட்டத்தில்
விநாயகர் பெருமையை விரும்பியே இணைக்க
விழாவது அமைத்து வித்திட்டு நின்றீர்
ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில்
ஆலய மகோற்சவம் அழகாய் அமைத்து
கண்ணையும் கருத்தையும் ஒருங்கே ஈர்க்கும்
சித்திரத்தேர் பெருவிழாவை சிறப்பாய் நடாத்தி
ஆன்மீக உலகில் அழியாப் புகழ் பெற்றீர்
ஆறாண்டு ஆகிறது ஆறவில்லை உள்ளங்கள்
ஆராய்ந்து நீங்கள் ஆற்றியபணிகள்
ஆறாக அவனியில் உயிர்களை வாழ்விக்கும்
26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பாரிஸ் மாணிக்க விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் ஸ்தாபகர் நினைவுப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் அன்னதான நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
RIP