யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் சந்திரசேகரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி..
“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" (திருவாசகம்)
ஓம் என்னும் பிரணவத்தை
ஓங்காரமாக ஒலிக்க வைத்து
பல்லின கலாசாரம் செறிந்து இருக்கும்
பாரிஸ் மாநகர் வீதிகள் எல்லாம்
எம்மின கலாசாரம் ஏற்றம்மிக்கதென்று
செம்மையாய் சிறப்பாய் சிறப்புற அமைத்து,
ஆண்டு தோறும் ஆவணித்திங்களில்
அழகுற அமைத்த தேர்களில் ஏறி
ஆரோகணித்து அடியவர் மனங்களில்
அழியா இடத்தை பெற்றிட வைத்த
அரும்சிறப்பு என்றும் உங்களைச்சாரும்
பாரிஸ் மாநகர் மையத்தில் எழுந்து
மக்கள் மனங்கள் மகிழ்வுடன் இருக்க
மாணிக்க விநாயகர் ஆலயம் அமைத்து
முப்பொழுதும் வழிபாடு முழுமையாய் நிகழ்ந்திடவே
எப்பொழுதும் கருத்தோடு செயலாற்றி வந்தீர்கள்
மண் இதில் பிறந்தார் பெறும் பயன்
மதி சூடும் அண்ணலார் அடியார்
அவர்தமை அமுது செய்வித்தல்
கண்ணினால்அவர் நல்விழாப்
பொலிவுகண்டு ஆர்தல்
உண்மையாம் எனில் உலகர் முன்
வருக என உரைப்பார். என
எண்ணினால் என்றும்
உங்களின் நினைவே
எம்மிடை தோன்றும்
அமுது செய்விக்கும் உங்களின் நற்பணி
செம்மையாய் சிறப்பாய் சிறந்து வளரும்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!
11-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் 10வது ஆண்டு நினைவு நிகழ்வை முன்னிட்டு ஆலயத்தில் இடம்பெறும் விசேட 108 கலச அபிஷேகத்திலும் தொடர்ந்து அன்னதான வைபவத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
RIP