யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் சந்திரசேகரம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
அளவை மண்ணின் அருந்தவப் புதல்வன்
அறம் வளர்த்த ஆன்றோனாய் அவனியில்
ஆலயம் அமைத்து அரும்பணி ஆற்றி
ஞாலம் போற்ற வாழ்ந்த பெருந்தகை
சொற் பதம் கடந்த துரிய மெய்ஞான
அற்புதன் ஈன்ற கற்பக களிறாய்
பாரிஸ் மாநகர் கைலாசபுரியாய்
பக்தருக்கு அருளும் மாணிக்கவிநாயகர்
கண்டு வணங்க கண்ணை திறந்து
என்றும் அருளும் எம் இறை நாயகன்
முப்பழம் நுகரும் மூஷிக வாகனன்
எப்பொழுது எல்லாம் ஆட்க்கொள்ள வேண்டினும்
அப்பொழுது எல்லாம் அருள் சுரந்து அருளி
தாயாய் எழுந்து தயை கூர்ந்து நின்று
சேயாய் எம்மை காத்து நின்றவரே
ஒற்ரை கொம்பன் விநாயகனை தொழ
துள்ளி ஓடும் தொடர்ந்த வினை என
அள்ளிய அன்பினை அவனியில் விதைத்து
அருட்பணி அரசாய் அரும்பணி செய்தீர்
நினைந்து நினைந்தடிமை கொள்வோர் இடர்கெடுத்து
தன்னை நினைய தருகின்ற விநாயகன்
புன்னை விரசுமகிழ் கோன்வியன் நாரை
முக்கண் அரசு மகிழ் அத்தி முகத்தான் என்று
நம்பி நவில்கின்ற நம் இறை நாயகனை
நம்மவர் துயர் துடைக்க வைத்தவர் நீங்கள்
அன்னை தந்தை வழி அறப்பணி செய்து
முன்னை வினையின் முதலை களைந்து
அரும்பணி செய்து அருட்பணி அரசாய்
என்றும் எம்மவர் சிந்தையில் நீங்கள்
எழிலாய் கோலம் கொண்டிருப்பீரே ...
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி...
20-03-2025 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பாரிஸ் மாணிக்க விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் ஸ்தாபகர் நினைவுப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் அன்னதான நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
RIP