யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் சந்திரசேகரம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
உலகில் உயிர் பெறும் உன்னத சிறப்பு
அலகில் சீர் உடை இறையடி தொழுதல்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
அன்பும் பண்பும் அவனியில் சிறந்து
அப்பன் விநாயகன் அன்பை அடைந்துய்ய
ஒப்பரிய பணியை ஒருவனாய் புரிந்து நின்று
ஓத வினையகலும் ஓங்கு புகழ் பெருகும்
ஓங்கார விநாயகர் திருவடி பணிந்து நின்று
அருட்பணி அரசாய் சிவநெறி செம்மலாய்
அகங்காரம் இன்றி அமைதியாய் வாழ்ந்திருந்தீர்
அஞ்சு முகம் தோன்றா அழகுமிகு வாழ்வெய்த
ஐங்கரனை அனுதினமும் அடிபணிந்து நெஞ்சழுத்தி
வாசமிகு வாழ்வில் வந்தணையும் நன்மையினால்
தேசுடனே மின்னித் திகழ்ந்திடவே பாரிஸ் மக்கள்
மாசற்ற மாதவத்தால் மாணிக்க விநாயகனை
காசினியில் துன்பங்கள் கடலளவு சூழ்ந்திருக்க
பாரிதிலே பரிதவிக்கும் பக்தர்கள் துயர்நீக்கி
முந்தைய தீவினைகள் மூளாது அழிக்கின்ற
எந்தை விநாயகன்புகழ் யாண்டும் இயம்பிடுவோம்
சிந்தையிலே வஞ்சமது சிறிதளவும் இன்றிநீர்
சீரிய நற்பணியை சிறப்பாக செய்தமையால்
அவனியிலே ஐங்கரனின் அரும்பணி தொடர்ந்திருக்க
விண்ணிலும் நீங்கள் மகிழ்ந்திருக்க பணி தொடர்வோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!
RIP